பிறை அறிவித்தல்

Print

பிறை பற்றிய முக்கிய அறிவித்தல்

அஸ்ஸலாமு அழைக்கும்

இங்கிலாந்து நாட்டில் பரவலாக நாமறிந்தவரை சவுதி பிறையை அடிப்படையாக

கொண்டே நோன்பு மற்றும் பெருநாள் உள்ளிட்ட பிறையோடு சம்பந்தப்படும்

இதர வணக்க வழி பாடுகள் நிறைவேற்றப்படுகின்றது


குர் ஆன் சுன்னா அடிப்படையில் உள்ளூர் பிறையை (குறிப்பிட்ட எல்லையை

அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் பிறையை ) கொள்கையாக

கொண்டியங்கும் நாம் இது பற்றிய சில விடயங்களை சக்திக்குட்பட்ட வகையில்

ஆய்வு செய்து சரியானதை பின்பற்ற வேண்டும் என்ற நன்னோக்கில் சிறு

முயற்சியில் இறங்கினோம்


அதன் பலனாக wifaqul ulama (www.moonsighting.org.uk) எனும் அமைப்பு உள்ளூர்

பிறையை அடிப்படையாக கொண்டியங்குவது தெரிய வந்த போது அவர்களின்

பிறை அறிவிப்பை ஏற்று செயல்படுவதென கடந்த 2014 ஆம் ஆண்டு

முடிவெடுக்கப்பட்டது


அதன் பின்னர் அவ்வப்போது wifaqul ulama இங்கிலாந்தில் மட்டுமல்லாது

MOROCCO மற்றும் SOUTH AFRICA நாடுகளின் பிறையை ஏற்று அதனையே

இங்கிலாந்துக்கும் அறிவிப்பதால் இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்

கொள்ளும் நோக்கில் 2014/12/01 அன்று Croydon மத்திய பள்ளிவாசளில் wifaqul

ulama உடன்  விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது


அதில் இங்கிலாந்தில் முழு ஆண்டும் பிறையை அவதானிப்பது சாத்தியமற்றது

என்பதால் மேற்படி இரு நாடுகளிலும் இருந்து வரும் பிறை தகவலின்

அடிப்படையில் இங்கு தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டது


எனினும் இது போதிய திருப்தியளிக்கும் பதிலாக இல்லாததினால் இது பற்றிய

மேலதிக தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது


இதனிடையே நாமே பிறையை அவதானித்து நடைமுறை படுத்தினால்

என்ன  என்ற ஒரு புதிய மசூரவை நமது leicester TNTJ சகோதரர்கள்

சாத்தியப்படும் தரவுகளுடன் கடந்த 2015/10/25 அன்று leicester இல் நடந்த

பிறை பற்றிய கலந்துரையாடலில் முன்வைத்ததன் அடிப்படையில் அன்று

முதல் ஏப்ரல் 2016 வரை (முஹர்ரம் முதல் ரஜப் வரை ) பரீட்சாத்தமாக

நாமே பிறையைஅவதானிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு


24/04/2016 அன்று CRAWLEY இல் கூட்டப்பட்ட UK இன் அனைத்து TNTJ

அமைப்புகளின் கூட்டத்தில் ஏற்கெனவே அவதானிக்கப்பட்ட பெறுபேறுகளை

அடிப்படையாக வைத்து உள்ளூர் பிறை சாத்தியமானதே என்ற தீர்மானம்

எடுக்கப்பட்டது. அஹம்துளில்லாஹ்


பிறை அவதானிப்பதில் நாட்டின் பல பாகங்களிலும் நமது 

அங்கத்தவர்கள் இருப்பதால் அந்ததந்த பகுதிகளில் ஒவ்வொரு மாதமும்

பிறையை பார்ப்பதுடன் wifaqul ulama அமைப்புடன் நெருங்கிய தொடர்பு

இருப்பதாலும் நாம் பிறை கண்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அவர்கள்

UK இல் பிறை கண்டால் நாம் ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடு

காணப்பட்டுள்ளது


நாம் அவதானித்த பிறை பற்றிய விபரம்

1) 13/11/2015 (29th MUHARRAM)-  Moon SIGHTED in Crawley -month of  SAFAR start          from 14/11/15

2) 12/12/2015 (29th SAFAR) - Moon NOT sighted. Month of Safar completed by 30 Days and     month of RABI UL AWWAL start  from 14/12/15

3) 11/01/2016 (29th RABI-UL AWWAL) -Moon SIGHTED in Hastings,Leicester - Month of       RABI UL AKHIR start from 12/01/16

4) 09/02/2016 (29th RABI UL AKHIR ) -Moon SIGHTED in Leicester -

Month of JAMAD AL ULA start from 10/02/16

5) 09/03/2016 (29th JAMAD AL ULA ) -Moon NOT sighted -Month of JAMAD AL ULA  completed by 30 days and month of JAMAD AL  UKHRA start from 11/03/16

6) 08/04/2016 (29th JAMAD AL UKHRA) -Moon SIGHTED in Croydon- Month of RAJAB start from 09/04/16

7) 07/05/2016 (29th RAJAB) - Moon NOT sighted - Month of RAJAB completed by 30 days      and month of SHAHBAN start from 09/05/16 

8)06/06/2016 (29th shahban) - MOON SIGHTED in many part of the uk -Month of RAMADAAN will begin from 07/06/16

9)05/07/2016 (29th Ramadaan) - Moon NOT Sighted - Month of Ramadaan will completed by 30 days and month of shawwal will begin from 07/07/16

                                                 ***EID ON THURSDAY 07/07/16***

10)04/08/2016 (29th Shawwal) - Moon NOT Sighted - Month of Shawwal will completed by 30 days and month of Dhul Qahda will begin from 06/08/16 

11)03/09/16 (29th Dul Qahda)Moon NOT Sighted - Month of Dul Qahdal will completed by 30 days and month of Dhul Hajj will begin from 05/09/16 

*****EID UL ADHA WILL BE ON 14/09/16 WEDNESDAY INSHA ALLAH ******

12)02/10/16 (28th* Dul Hijjah) - MOON SIGHTED* in Leicester - Month of MUHARRAM will begin from 03/10/16 >>DAY of ASHURA (10th Muharram) FALL ON 12/10/16

**The Hilal of MUHARRAM suppose to be observe on 03/10/16 (29th dul hijjah) but we Received positive sighting report from leicester therefore we are force to end month of dul hijjah by 28 days** 

1-1)31/10/16 (29th Muharram) -Moon NOT sighted- Month of Muharram will completed by 30 days and month of SAFAR will begin from 02/11/16 

1-2) 30/11/16 (29th Safar) -MOON SIGHTED IN TOOTING- Month of RABI UL AWWAL will begin from 01/12/16

1-3) 29/12/16 (29th Rabi ul Awwal)- MOON NOT SIGHTED 

Month of Rabu ul Awwal will completed by 30 days and month of RABI UL THANI will begin from 31/12/16 

1-4) 28/01/2017 (29th Rabi ul Thani)-MOON NOT SIGHTED 

Month of Rabu ul Thanil will completed by 30 days and month of JAMAD UL ULA will begin from 30/01/17

 

1-5) 27/02/17 (29th Jamath ul ULA) MOON SIGHTED IN LONDON AND PRESTON 

month of  JAMAD UL UKHRA will begin from 28/02/17

1-6) 28/03/2017 (29th Jamth ul UKHRA) MOON NOT SIGHTED 

Month of JAMAD UL UKHRAl will completed by 30 days and month of RAJAB will begin from 30/03/17

 

 1-7) 27/04/17 (29th of RAJAB) MOON SIGHTED IN LEICESTER month of

SHAHBAN will begin from 28/04/17

 1-8) 26/05/17 (29th of Shahban)  MOON NOT SIGHTED 

Month of Shahban will completed by 30 days and month of RAMADAN will begin from 28/05/17

 

 1-9) 25/06/17(29th of RAMADAN) MOON SIGHTED IN MANY PART OF THE  COUNTRY  month of SHAWWAL will begin from 26/06/17

***EID UL FITHR ON 26/06/17 MONDAY***

 1-10) 24/07/17 (29th of Shawwal) - Moon NOT SIGHTED 
Month of shawwal completed by 30 days and month of DHUL QAHDA begin from 26/07/17

1-11) 23/08/17 (29th of DHUL QAHDA) Moon NOT SIGHTED 
Month of dhul qahda completed by 30 days and month of DHUL HIJJA begin from 25/08/17

***EID UL ADHA ON 03/09/2017 SUNDAY ***

1-12) 22/09/17 (29th of DHUL HIJJA)

 

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் பிறையை ஒவ்வொரு

மாதமும் இங்கிலாந்தில் மாத்திரம் பார்த்து முடிவெடுக்கப்படும்

பிறை பார்த்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அறிவிக்கப்படும்


பிறை தென்படாத மாதங்களில் நபிகளாரின் வழி காட்டுதலின் அடிப்படையில் 30

ஆக பூர்த்தி செய்யப்படும்


பிறை பார்க்க வேண்டிய நாள் பற்றிய நினைவூட்டல்கள் அறிவிக்கப்படுவதோடு

அத்தினத்தில் பிறை தென்பட்டால் எமக்கு அறியத்தருமாறு uk வாழ்

முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறோம்

 

>*பிறை தென்படுவதட்கான வாய்ப்புகள் மற்றும் வானியல் தகவல்கள்

அடங்கிய ஐக்கிய ராஜ்ஜிய அரச தளம் 

http://astro.ukho.gov.uk/nao/online/

 

உலக நாடுகளில் பிறை தென் படுவதட்கான உத்தேச வாய்ப்புகள் மற்றும்

தென்பட்ட தகவல்கள் அடங்கிய இணையத்தளம் 

www.moonsighting.com 

 

>> Uk Moon sighting site

www.moonsighting.org.uk