பிக்ஹு சட்டங்களும், அல்லாஹ்வின் சட்டங்களும்

Print

இமாம்களின் மார்க்க சட்டங்களை பின்பற்றுவது

சரியா?  தவறா? 

 

பிக்ஹு  என்பதற்கு ரசூல் (ஸல்) அவர்களின் காலத்தில் 
ஞானம், அறிவு என்று பொருள் இருந்தது ஆனால் இமாம்களின் காலத்துக்கு பின் இதற்கு இமாம்களின் மார்க்க சட்டமாக பொருள்கொள்ளபட்டது. 
இதே போல் அபூதாவுதில் வரக்கூடிய முதலாவது ஹதீஸில் "ரசூல் (ஸல்) அவர்கள் மலசலம் கழிப்பதற்கு செல்லும் போது தூர செல்வார்கள்" இதில் மலசலம்  (Toilet) கழிக்குமிடத்துக்கு
மத்ஹப் என்று அக்காலம் கூறினார்கள் பின்னர் இமாம்களின் கூற்றுக்கு மத்ஹப்  (வழி, பாதை) என்று பொருல்சொல்லப்பட்டு வருகிறது.

 

 

ஒரு முஸ்லிம் வஹி என்னும் இறைச்செய்தியை மட்டும்தான் 
பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் உத்தரவிடுகின்றான்.

 

"உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்". (7:3)

 

 

 

இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் மார்க்கம் என்று யார் எதைக்கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். 

 

அல்லாஹ் கூறாத எதுவும் இஸ்லாம் மார்க்கமாகக்கருதப்பட மாட்டாது. ஒன்ரைச்சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது.

 

"அதிகாரம் அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் இல்லை" (12:40) 

 

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான இந்த மார்க்கத்தில் 

 

இறைத்தூதர்களும் கூட தமது சுய விருப்பப்படி எதையும் சட்டமாக்கிட முடியாது.

 

 

 

" (முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக". (18:27) 

 

 

 

மேலும் அல்லாஹ் ரசூல் (ஸல்) அவர்களைப்பார்த்து கூறுகின்றான்.

 

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் "இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!" என நமது சந்திப்பை  நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்" என (முஹம்மதே!) கூறுவீராக. (10:15)

 

 

 

மேலும் மார்க்க சட்டங்கள் வஹி கிடைக்காத போது ரசூல் (ஸல்) அவர்களுக்குக்கூட தெரியவில்லை. இதற்கு இன்னும் சில ஹதீஸ்கலைப்பார்ப்போம். "ரசூல் (ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்
பெற்றுக்கொண்டார் சிறிது நேரத்துக்கு பின் பட்டாடையை உமரிடம் நீட்டி இதை நீ வைத்துக்கொள் இது எனக்கு ஹராம்  என்று இப்பொழுதுதான் ஜிப்ரீல் வந்து சொல்லிவிட்டுப்போனார்" 

 

 

 

இன்னொரு சந்தர்ப்பத்தில் "ரசூல் (ஸல்) பாதையில் செல்வதைக்கண்ட யூதர்கள் அவரிடம் சென்று உயிர் என்றால் என்ன என்று கேட்போம் என்று அலோசித்ததோடு போய் கேட்கின்றனர். ரசூல் (ஸல்) அவர்களுக்கு பதில் தெரியவில்லை திகைத்து நிற்கின்றனர். பின் வஹி மூலம் அல்லாஹ் அறிவிக்கிறான் "நபியே உம்மிடம் உயிர் என்றால் என்ன என்று கேட்கின்றனர் கூறுவீராக அது அல்லாஹ்வின் கட்டளை".

 

 

 

இன்னொரு சந்தர்ப்பத்தில் "ஒருவர் ரசூல் ஸல் அவர்களிடம் வந்து நான் சஹீத் ஆக மரணித்துவிட்டால் என்னுடைய எல்லப்பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுமா? என்று வினவ 'ஆம்' என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின் சிறிது நேரம் கழித்து! உங்களில் யார் என்னிடம் கேள்விகேட்டது அவர் எங்கே? அவர் நான் இதைத்தான் கேட்டேன் என்று சொல்ல பின் தூதரவர்கள் சொன்னார்கள். உன்னுடைய எல்லாப்பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத்தவிர" எனக்கு இப்போதுதான் வஹி மூலம்

 

அறிவிக்கப்பட்டது.

 

 மேலும் பதுருப்போர் சந்தர்ப்பத்தில் ரசூல் (ஸல்) சுய முடிவு எடுத்தபோதிலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண்தெரியாத சஹாபி நபியவர்கள் சபைக்கு வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும், தேன் தனக்கு ஹராம் என்று சொன்ன போதும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்கு போதித்த அனைத்தும் இறைச்செய்திகள் தான். அதாவது ஹதீஸ்களை நபியவர்கள் தமது சுய விருப்பப்படி கூறவில்லை என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

 

 

 

அத்தோடு அல்லாஹ் தூதருக்கு கட்டளையிடுகின்றான்.

 

"உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்." 43-43,44

 

 

 

"அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்". 5:49

 

 

 

 

 

சஹீஹான ஹதீஸ்கலும் வஹிதான் என்பதை குரான் பின்வருமாறு குறிப்பிடுகிறது. "அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத்தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக்கொடுக்கிறார்". 53:3-7

 

 

 

எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மனோ இச்சைப்படி

 

பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச்செய்தி தவிர வேறில்லை என்று மேலுள்ள வசனமும் கூட தெளிவு படுத்துகிறது.

 

அல்லாஹ் அருளியவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். வேறு சஹாபாக்கள், மத்ஹப் இமாம்களாக இருந்தாலும், வேறு யாருடைய கருத்தாக இருந்தாலும் அவற்றை மார்க்கமாகக்கருதி பின்பற்றக்கூடாது என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

 

என்றாலும் மத்ஹப் நாம் பின்பற்றக்கூடாது என்பதற்கு மேலதிக விபரங்களைப்பார்ப்போம்.

பிக்குஹு சட்டங்களின் லட்சணம்..

இப்பொழுது நாங்கல் ஒரு சில பிக்குஹு (மதுஹப்) சட்டங்களை பாப்போம், பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் எவ்வளவு ஆபத்தான, மடமையான, காபிர்கள் கூட கண்டு கேளிசையக்கூடிய,  அசிங்கமான மேலும் பாவம் செய்துவிட்டு  தண்டனையிலிருந்து  எப்படி தப்பலாம் என்பன போன்ற சட்டங்கள் நிறைய இருப்பதையும், இதையெல்லாம் இஸ்லாம் என்ற பேரில் சட்டப்புத்தகமாக ஆதரித்து வருகிறார்களே என்பதும் புலப்படும்.

கசையடிக்கு விசித்திரமான விளக்கம்

விபச்சாரம் செய்பவர்களுக்கு 100 கசையடி அடிக்க வேண்டும்.  இது திருக்குர்ஆன் கூறும் சட்டம்.  அவ்வாறு கசையடிப்பதால் விபச்சாரம் குறையும் என்பது இதற்கான காரணம்.

ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான மஙானி எனும் தமிழ்நூலில் இந்தச் சட்டத்துக்கு அளிக்கும் விளக்கத்தைப் பாருங்கள்!

ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டுமாம்.  ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டுமாம்.  இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடுமாம்.

அந்தக் குற்றத்துக்கு இது தான் தண்டனையா? இவ்வாறு செய்தால் விபச்சாரம் ஒழிந்து விடுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கசையடி அடித்தார்களா?

நான்கு வருட கர்ப்பம்

ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர்ப்பமுற்றால் அந்தக் குழந்தை அவனையே சேரும்.

(மஙானி பக்கம் 507)

ஷரீஅத் பேரவையின் முன்னோடிகள் தமது குடும்பத்தில் இவ்வாறு நேர்ந்தால் இதனடிப்படையில் தான் முடிவு செய்வார்களா? இவ்வாறு முடிவு செய்ய ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? ஹதீஸ் எது?

இமாமின் தகுதிகள்

தொழுகையை நடத்தும் இமாம்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்? ஹனபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தார் முதல் பாகம் 412 ல் கூறப்படுவதைப் பாருங்கள்!

 

பின்னர் அழகிய மனைவியை உடையவராக இமாம் இருக்க வேண்டும்.  அடுத்து அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும்.      (துர்ருல் முக்தார்)

மத்ஹபுகளில் கூறப்படுவதில் ஷரீஅத் பேரவைக்கு நம்பிக்கை இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இமாம் வேலை தேடிச் செல்லும்போது மனைவியையும் அழைத்துச் சென்று அனைவருக்கும் காட்ட வேண்டும்.  மனைவி அழகாக இருந்தால் இமாமத்துக்குத் தகுதி பெற்றவராவார்.  இப்படித்தான் நடக்கிறார்களா?  பள்ளிவாசல்களின் இமாம்களாகப் பணியாற்றக் கூடியவர்களையெல்லாம் ஒன்று கூட்டி, சிறிய தலை உடையவர்களையும், பெரிய உறுப்பு உள்ளவர்களையும் இமாமத்திலிருந்து ஏன் நீக்கவில்லை?

இதையெல்லாம் இமாமத்துக்குரிய தகுதிகள் என்று அல்லாஹ் கூறினானா? அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?

இலங்கையில் அல்லது UKயில் ஜும்மாஹ் கிடையாது.

மத்ஹபை நியாயப்படுத்த ஷரீஅத் பேரவையினர் இலங்கையில் பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்துகின்றனர்.  ஆனால் அவர்கள் ஆதரிக்கும் மத்ஹபின் படி இலங்கையில் ஜும்ஆத் தொழுகை நடத்த முடியாது.

மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ தவிர மற்றவர்கள் ஜும்ஆவை நடத்துவது செல்லாது.

ஹனபி மத்ஹபின் சட்டநூலான ஹிதாயா, முதல் பாகம், பக்கம் 168

பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது.  எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளாரோ அதுவே பெருநகரமாகும்.  (அதே நூல், அதே பாகம், அதே பக்கம்)

இப்படிச் சட்டம் இயற்றியவர் யார்?  இதற்கான ஆதாரம் என்ன? மத்ஹபை பின்பற்றாதவர்கள் வழிகேடர்கள் என்றால் இலங்கையில் or UKயில் உள்ள எல்லா மவ்லவிகளும் மத்ஹபுக்கு மாற்றமாக ஜும்ஆ நடத்துவது ஏன்?

பொது வழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.

ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத்தான் விற்க முடியும் உரிமையில்லாத எதனையும் எவரும் விற்க முடியாது,  அறிவுடைய எந்த மனிதரும் இதை ஏற்கமட்டார்.  ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூல் விற்கலாம் எனக் கூறுகிறது,  (ஹிதாயா பாகம் 2, பக்கம் 4)

கற்பனைக் கதைகள்

அபூஹனீபா இஷாவுக்கு செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுதார்.  இவ்வாறு நாற்பது வருடங்கள் தொழுதிருக்கின்றார்.  ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார்.  தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்.    துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 38

15 ஆயிரம் இரவுகள் அவர் உறங்கவில்லையா?  மலஜலம் கழிக்க வில்லையா?  காற்று பிரியவில்லையா?  மனைவியுடன் குடும்பம் நடத்தவில்லையா?  இப்படி நடக்க முடியுமா?  நடக்க அனுமதியாவது இருக்கின்றதா? 

மூஸா நபி, ஈஸா நபி ஆகியோரின் சமுதாயங்களில் அபூஹனீபா போன்றவர் இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆகியிருக்க மாட்டார்கள்.

துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 40

மற்றொரு கதை!

எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமையடைகின்றனர்.  ஆனால் நானோ அபூஹனீபாவின் மூலம் பெருமையடைகின்றேன்.  யார் அவரை நேசிக்கிறாரோ அவரை நானும் நேசிக்கிறேன்.  யார் அவரை வெறுக்கிறாரோ அவரை நானும் வெறுக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.      துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 39

மிருகத்தனமான சட்டம்

மிருகத்துடன் அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. - துர்ருல் முக்தார் பாகம் 1 பக்கம் 23            இப்படியெல்லாம் அசிங்கமாகக் கற்பனை செய்வது தான் மாநபி வழியா? மிருகத்துடனும் செத்த பிணத்துடனும் உடலுறவு கொள்ள இது தூண்டாதா?  இதற்கான ஆதாரம் என்ன?

ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை. - துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 150

நோன்பு வைத்துக் கொண்டு செத்த பிணத்துடன் அல்லது மிருகத்துடன் ஒருவன் உடலுறவு கொண்டால் கப்பாரா அவசியம் இல்லை.  (ஹிதாயா பாகம் 1, பக்கம் 219)

மிருகத்துடன் புணர்தல் சம்பந்தமாக ரசூல் (ஸல்) அவர்கள் எவ்வளவு தெளிவாக சொல்லியுள்ளார்கள். "மிருகத்துடன் புணர்பவனையும் அம்மிருகத்தையும் கொன்று விடுங்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அஹ்மது- 359)

ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம். (துர்ருல் முக்தார் - பாகம் 1, பக்கம் 154)

தொழுகையில் பாரசீக மொழியில் ஓதினால் அல்லது தவ்ராத் இஞ்சீலை (பைபிளை) ஓதினால் அது கதைப் பகுதியாக இருந்தால் தொழுகை பாழாகிவிடும்.  போதனைகளாக இருந்தால் தொழுகை பாழாகாது.      (துர்ருல் முக்தர், பாகம் 1, பக்கம் 359)

குழந்தைகளைத் திருடலாம்.

நகைகள் அணிந்துள்ள குழந்தையை (நகையுடன்) யாரேனும் திருடிச் சென்றால் அவனது கைகளைத் துண்டிக்கக் கூடாது.                                  (ஹிதாயா பாகம் 1, பக்கம் 540)

ஷரீஅத் பேரவையின் காவலர்கள் வீட்டுக் குழந்தைகளை நகைகளுடன் யாரேனும் கடத்திச் சென்றால் அவர்களை விட்டு விடுவார்களா?

 

இப்படியும் திருடலாம்! ஒருவன் மற்றவரின் வீட்டில் துவாரமிட்டு அதன் வழியாக எதையேனும் எடுத்தால் அவனது கையைத் துண்டிக்கக் கூடாது.  (ஹிதாயா பாகம் 1, பக்கம் 546)

விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு!  விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் மதுஹப் சட்டப்படி அவனுக்குத் தண்டனை இல்லை. (கன்ஸுத்தகாயிக், பாகம்-1, பக்.184)  ஏனெனில் அவர் காசு கொடுத்துத்தானே விபச்சாரம் செய்தார் அது மஹர் மாதிரி எப்படி அற்புதமான சட்டம்.

மேலுள்ளவைகலை இறையச்சமுடைய எந்த மனிதனாவது இப்படியெல்லாம் கற்பனை செய்வானா?  இந்தச் சட்டம் எந்த வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது?  எந்த நபி மொழியின் அடிப்படையில் இது இயற்றப் பட்டது? இதற்கும் மதுஹப் ஆதரவாளர்கள் பதில்தரட்டும்.

இதன் பிறகுமா மத்ஹபை ஆதரிக்கிறீர்கள்? அப்படியானால் இதற்குரிய ஆதாரத்தை அடுக்கடுக்காக அள்ளி வீசுங்கள்!

மத்ஹபு நூல்களில் இடம் பெற்றுள்ள அபத்தங்களையும் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்ட மத்ஹபின் சட்டங்களையும் நாம் அடையாளம் காட்டி நிரூபித்தோம். ஆயினும் மத்ஹபில் பிடிவாதம் பிடிக்கும் ஆதரவாளர்கள்அந்த அபத்தங்களையும் கூட நியாயப்படுத்தி மத்ஹபைத் தூக்கி நிறுத்த முயற்சித்து வருகின்றனர்.

"இதை உருவாக்கியவர்கள் எந்த அளவு இறையச்சமற்றவர்களாகவும் விபரங்கெட்டவர்களாவும் இருந்துள்ளார்கள்''

தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் நபருக்குரிய லட்சணமாகும்.

இந்த நூல்களை உங்களைப் போன்ற சில மனிதர்கள் தான் எழுதினார்கள். அவர்களுக்கு வஹி எதுவும் வரவில்லை. எனவே இந்த விஷயத்தில் தவறாக எழுதிவிட்டார்கள் என்று ஒப்புக் கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்? சிந்திக்க மாட்டீர்களா?

எனவே மதுஹப் சட்டங்கலில் உள்ளவைகள் ஆபத்து அசிங்கங்கள் ஆகும் இன்னும் இது போன்ற பல சட்டங்கள் இருந்தும் கட்டுரை பெரிதாகக்கூடாது என்ற நோக்கில் பதியவில்லை. சிந்திப்பவர்களுக்கு இது போதும்.

இமாம் அபூஹனிபா ரசூல் (ஸல்) மரணித்து 80 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர் இமாம் சாபி 150 பின் பிறந்தவர். இவர்கள் சஹாபிகள் கூடக்கிடையாது. இவர்களது மற்றைய மார்க்க சட்டங்களிலும் 90% மானவை லயீபான ஹதீஸ் அடிப்படையில் சட்டம் வகுத்திருப்பதையும், ஒரு ஹதீசைப்பர்த்து மற்றது கிடைக்காத நிலையிலுள்ள பத்வாகளும் மேலும் குரானுடைய கருத்துக்கு மாற்றமான பத்வாக்களும் வழங்கப்பட்டுள்ளது. இமாம்கள் அக்காலம் உள்ள வசதிவாய்ப்புகளின் அடிப்படையில் ஹதீஸ் கிடைத்ததட்கேப்ப சட்டங்களை வழங்கினார்கள். ஆனால் இப்பொழுது நமக்கு ஒரு ஹதீஸை பார்ப்பது, அதன் அறிவிப்பு வரிசையைப்பார்ப்பது என்பது மிகக்குறுகிய நேரத்தில் செய்து கொள்ளக்கூடியவிடயம்.அந்தளவுக்கு தொழில்நுட்ப விருத்தியால் புத்தகங்கள், software கல் வந்துவிட்டன. இதைத்தான் ரசூல் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் விதா கடைசி ஹஜ்ஜில் நடத்திய உரையில் சொன்னார்கள். "இங்கு வந்திருப்பவர்கள் போய் வராதவர்களிடம் சொல்லுங்கள் அவர்கள் உங்களைவிட சிறப்பாக விளங்குவார்கள்"

 

 

இந்த இமாம்களின் சட்டத்தின் அடிப்படையில் நமது சமூகம் பின்பற்றும் 90% மேற்பட்ட மார்க்க விடயங்கள் குரானிலும், சஹீஹ் ஹதீஸிலும் இல்லாதவையாகும். 

தொழுகையில் தக்பீட் கட்டுவதுமுதல் சலாம் கொடுக்கும் வரையில் கூட எத்தனை பித்அத்கல் இவற்றை அல்லாஹ் ஏற்பானா நிச்சயமாக இல்லை என்பதையும் மேலே பார்த்தோம். அல்லாஹ் ரசூல் (ஸல்) அவர்களுக்கே எவ்வளவு கடிவாளங்களை போடுகிறான் என்பதையும், அல்லாஹ் ஒருவிடயத்தை சட்டமாக்கி அதை இப்படித்தான் செய்யவேண்டும் அதுதான் எனக்கு பிடிக்கும் என்பதற்காக ரசூல் (ஸல்) அவர்களின் ஊடாக செய்து காட்டியபின் நீங்கள் கண்மூடித்தனமாக இமாம்கள் சொன்னார்கள் அவர்கள் தவரிளைப்பார்களா என்று முட்டாள் தனமாக வாதிடுபவர்களுக்கான விளக்கங்களையே மேலே விளக்கியுள்ளோம்.

 

இந்த இமாம்களுக்கு வஹீ வருமா? மார்க்க காரியங்கள் செய்வது மிகவும் எளிதல்ல அதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும், குளிரில் எழுந்து சுபஹுக்கு பள்ளிக்கு செல்லவேண்டும் இதுபோல் நோன்பு

மற்ற வனக்கங்களுக்கும் சிரமப்படவேண்டும் நேரம் ஒதுக்கவேண்டும். இவ்வாறு கஷ்டப்பட்டு செய்ததற்கு மறுமையில் நரகம் தான் கிடைக்குமானால் ஏன் செய்யவேண்டும்.

இமாம்களையும், பெரியார்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றிவிட்டு மறுமையில் நரக நெருப்பில் விழுவதையும், இவர்கலின்

புலம்பளைப்பற்றி நமக்கு முன் எச்சரிக்கைக்காக அல்லாஹ் பின்வருமாறு சொல்லிக்காட்டுகிறான்.

 

"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில்"நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?" எனக் கூறுவார்கள். 

 

 "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்" எனவும் கூறுவார்கள். 

 

"எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!" (எனவும் கூறுவார்கள்). 

(33 - 66,67,68)

 

 எனவே செய்யும் அமல்களை அல்லாஹ்வும் தூதரும் சொன்னமுரையில் பின்பற்றினால் மட்டுமே வெற்றி நிச்சயம்.

"அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்". (33:71 )

 

இமாம்களை விட எத்தையாயிரம் மடங்கு ரசூல் (ஸல்) அவர்கள் உயர்ந்தவர்கள். அல்லாஹ்வின் தூதர் அதுமட்டுமல்லாமல் அல்லாஹ்விடமிருந்து காலையிலும் மாலையிலும் இறைச்செதியை பெறுபவர்கள். 

இப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களுக்கு கூட அல்லாஹ் சொல்லாததைச்சொல்ல அனுமதியில்லை, என்பதை அல்லாஹ் எங்களுக்கு பின்வரும் வசனம் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

   "சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்". 69:44,45,46

 

எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் மாத்திரம் கற்றுத்தந்த முறையில் எமது வணக்க வழிபாடுகை அமைத்து இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியீட்டிக்கொள்ள முயற்சி செய்வோம்.

"தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு". (3:105) 

 

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader